நடிகர் அஜித் குமார் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் சென்ற நிலையில், மனைவி ஷாலினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் பதறியடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்துள்ளார்.

மருத்துவமனையில் படுக்கையில் அமர்ந்திருக்கும் ஷாலினியின் பக்கத்தில் எப்போதுமே துணையாக நான் இருக்கிறேன் என நடிகர் அஜித் ஷாலினியின் கையை பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்லும் செம எமோஷனலான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போது ஷாலினியை காதலிக்கத் தொடங்கிய அஜித் திருமணமாகி இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அதே காதலுடன் அப்படியே தனது மனைவியை பார்த்துக் கொள்வது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக நடிகர் அஜித்துக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், நடிகை ஷாலினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. நடிகர் அஜித் சென்னைக்கு திரும்புவாரா? மாட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தனது மனைவியை காண ஓடோடி வந்து விட்டார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படம் அஜர்பைஜானில் உருவாகி வரும் நிலையில், அஜித் குமார் சென்னை திரும்ப மாட்டார் என்றும் மனைவியின் அறுவை சிகிச்சைக்கு அஜித் வர மாட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால், ஷாலினி மீதுள்ள அளவற்ற காதல் காரணமாக ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு அஜித் சென்னை திரும்பியிருக்கிறார்.

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியின் கைகளை மருத்துவமனையில் பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்லும் போது எடுக்கப்பட்ட க்யூட்டான புகைப்படத்தை’Love You Forever’ என்கிற சூப்பர் க்யூட்டான கேப்ஷனுடன் நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை சோஷியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இப்படியொரு கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் சீக்கிரமே ஷாலினி மேடம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal