நடிகை த்ரிஷா தனது அம்மா உமா கிருஷ்ணனுடன் இருக்கும் போட்டோக்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

16 வயதில் மாடலாக தனது திரை வாழ்க்கையை தொடங்கி த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார். 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய கேரக்டரில் நடித்த த்ரிஷா இன்று தென்னிந்திய சினிமாவின் குயினாக வலம் வருகிறார். பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தில் முதலில் கமிட் ஆனாலும் மௌனம் பேசியதே படம் முதலில் வெளியானதால் அதுவே திரிஷா முதல் படமாக மாறியது.

இதை தொடர்ந்து மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஆறு என பல படங்களில் நடித்தார். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, சிம்பு, கமல், விக்ரம் என அப்போது டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா. இதனிடையே தொடர் வெற்றி படங்கள் மூலம் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக மாறினார் த்ரிஷா..

அபியும் நானும், விண்ணை தாண்டி வருவாயா, கொடி, 96, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் த்ரிஷாவின் நடிப்பு பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. நடிகை த்ரிஷா கடைசியாக லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

திரையுலகில் அவ்வப்போது பல சறுக்கல்களை சந்தித்தாலும் த்ரிஷா தற்போது வரை உச்ச நடிகையாகவே தொடர்கிறார். அந்த வகையில் தற்போது அஜித்தின் விடா முயற்சி, மணிரத்னம் – & கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் ஆகிய படங்களிலும் நடித்து த்ரிஷா வருகிறார். இவை தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே விஜய் – த்ரிஷா ரிலேஷன்ஷிப் குறித்து பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. த்ரிஷா – & விஜய் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. கடந்த 2 வாரங்கள் இந்த விவகாரம் இணையத்தில் பேசு பொருளான நிலையில், மற்றவர்கள் சொல்லும் கருத்துகளை தலையில் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்ற ரீதியில் த்ரிஷா சமீபத்தில் மறைமுகமாக பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது அம்மா உமா கிருஷ்ணனுடன் இருக்கும் போட்டோக்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் த்ரிஷா தனது அம்மா உடன் இருக்கும் பல அன்சீன் போட்டோக்கள் இருக்கின்றன. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் த்ரிஷாவை விட அவரின் அம்மா க்யூட்டாக இருப்பதாகவும், சந்தூர் மம்மி என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal