பொன்னியின் செல்வன் பாகம் 1 2022 இல் திரைக்கு வெளிவந்த ஒரு தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மணிரத்னம் இயக்கித் தயாரித்தார். இது பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட இரு பாகங்களின் முதல் பாகம் ஆகும். இளங்கோ குமரவேல், பி.ஜெயமோகன் ஆகியோருடன் இணைந்து ரத்னம் இதற்கான திரைக்கதையை எழுதியுள்ளார்.

இத்திரைப்படத்தின் முதன்மை நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிசா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ச்சுமி, அஸ்வின் ககுமனு, சோபிதா துலிபாலா மற்றும் துணைநிலை நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ் , ரகுமான் ஆகியோர் ஆவர். ஏ. ஆர். ரகுமான் இசைமைத்துள்ளார் , ரவி வர்மன் ஒளிப்பதிவையும் ஏ. ஸ்ரீகர் பிரசாத் தொகுத்தலையும் தோட்டா தரணி தயாரிப்பு வடிவமைப்பையும் புரிந்தனர்.

பொன்னியின் செல்வன் முதலில் தனித்து நிற்கும் திரைப்படமாக இருக்கும் நோக்குடன் இருந்தது. ஆனால் பின்னர் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, அதில் முதல் பாகமானப் பொன்னியின் செல்வன் 1 செப்டம்பர் 30, 2022 இல் உலகம் முழுவதும் வெளியானது.

மக்களால் பெரிதும் ரசிக்க படுகின்ற இந்த திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகின்றது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்காக, காத்திருக்கும் வேளையில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் முக்கியமான கதாபாத்திரமான வந்தியத்தேவனாக இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

இந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம் எம்ஜிஆர் முதல் பல நடிகர்கள் நடிக்க விருப்பப்பட்ட கதாபாத்திரம் ஆகும்.

By admin