Month: February 2024

பெரம்பலூர் தொகுதி! அருண் நேருவுக்கு செக்..!

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், திடீரென்று தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியை திருமாவளவன் கேட்பதுதான் அருண் நேரு தரப்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.…

பாஜகவுடன் சேர எதிர்ப்பு! அதிமுகவுடன் சேர தேமுதிக விருப்பம்!

தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கடந்த மாதம்தான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மரணமடைந்தார். அதன் பிறகு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி என பிரேமலதா…

பா.ஜ.க.வில் இணையும் காங். எம்.எல்.ஏ. விஜயதரணி!

விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு எம்எல்ஏவாக விஜயதரணி மூன்றாவது முறையாக இருந்து வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் முதன்மை…

அனுமதியற்ற வீட்டு மனை! அவகாசம் கொடுத்த அமைச்சர்!

தமிழகத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை செய்துகொள்ள வரும் பிப்ரவரி 29-ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேல் காலஅவகாசம் வழங்கப்படாது என்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். அனுமதி அற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறை படுத்தும் திட்டத்தின்…

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும்! ப.சிதம்பரம் பேட்டி!

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் கொல்கத்தாவில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,…

இனி  தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்க்கு தடை..! மீறினால் கடும் நடவடிக்கை..!

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் “ரோடமைன் பி” கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை…

அதிமுகவுடன் கூட்டணி! திசைமாறும் திருமாவளவன்!

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடக்கிறது. இதில் கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரசை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு ஒரு தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.…

பொது தொதியில் புதிய வேட்பாளர்! திருமா திடீர் முடிவு!

விசிகவில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் நவீனத்துவ மாற்றங்களுக்கு பின்னணி நபராக அறியப்பட்டவர் ஆதவ் அர்ஜூனா. தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தலைவரான அவர், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டில் விசிகவின்…

முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் மீதான வழக்கு ரத்து! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக…

வருமான வரித்துறை பாசிச பா.ஜ.க.வின் கைப்பாவை…! செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கண்டனம்!!

வருமான வரித்துறை காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருப்பதற்கு செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாசிச பா.ஜ.க.வின் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் வருமான வரித்துறை காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும்…