தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம்தான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மரணமடைந்தார். அதன் பிறகு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். ராஜ்ய சபா சீட் கொடுக்க முடியாது என பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில்தான் இன்றைக்கு நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது நம் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதற்கு சமம். அ.தி.மு.க. கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட்டால் ஓரிரு இடங்களிலாவது வெற்றி பெற வாய்ப்புண்டு’ என அனைவரும் கோரசாக குரல் எழுப்பியிருக்கின்றனர்.

எனவே, இரண்டொரு நாளில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறது என்கிறார்கள் ‘முரசு’ வட்டாரத்தில்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal