சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் “ரோடமைன் பி” கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தடையை மீறி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal