அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.