Month: July 2023

சசிகலாவின் ‘கொங்கு’ ஆபரேசன்! அதிர்ச்சியில் எடப்பாடி!

அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற முயற்சித்த செந்தில் பாலாஜி கைதாகியிருக்கிறார். அவருடைய அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்று தெரியவில்லை. செந்தில் பாலாஜியின் கைது எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக முக்குலத்தோர் வாங்குகளை குறிவைக்கும்…

‘அண்ணாமலைக்கு அருகதை இல்லை!’ உக்கிரமான உதயநிதி?

மகளிர் உரிமைத் தொகைப் பற்றி அண்ணாமலை பேச அருகதை இல்லை என உதயநிதி உக்கிரமாக பேசியிருப்பதுதான் உடன் பிறப்புக்களையே வியக்க வைத்திருக்கிறது. கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 படித்த 4 லட்சத்து 89 ஆயிரத்து 600 மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும்…

ஆட்சி கலைப்பு – கொள்கை பிடிப்பு! வரவேற்கும் வி.சி.க.!

‘ஆட்சியே கலைத்தாலும் பரவாயில்லை’ என்ற முதல்வரின் கொள்கை பிடிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என தொல். திருமாவளவன் பேசியிருக்கிறார்! வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்துத்துவா செயல் திட்டத்தினை மக்களை…

நாடாளுமன்றத் தேர்தல்; செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்!

2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. அதற்கு முன்னர் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அக்கட்சி இறங்கியுள்ளது. அந்த வகையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் 8 பேர் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் 10 பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக…

ஊதிய உயர்வு வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் மறியல்!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் தோறும் ஊதியமாக ரூ.9300 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்த…

கோவையில் தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயமும் விலையேற்றம்!  

கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அங்கு அவை வியாபாரிகளுக்கு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு…

வெள்ளக்காடாக  மாறிய இமாச்சல பிரதேசம் – மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!

பருவமழை கொட்டித்தீர்த்ததன் காரணமாக இமாச்சல பிரதேசத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக  காட்சி அளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் மழையில் இமாச்சல பிரதேசத்தில் மட்டும்…

‘திமுக ஆட்சிக்கு ஆபத்து!’ அதிர வைத்த மு.க.ஸ்டாலின்!

‘மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பதால், தி.மு.க.வின் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கவலைப்பட வேண்டாம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திராவிடர் இயக்க முதுபெரும் சிந்தனையாளர் க.திருநாவுக்கரசு இல்ல திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் பங்கேற்று…

ரூ.400 கோடி ஊழல்! முறைகேடு இல்லை! மின்வாரியம் விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் மாற்றிகள் வாங்கியதில் சுமார் ரூ.400 கோடி ஊழல் நடந்ததாக, புள்ளி விபரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான் மின்வாரியத்தில் முறைகேடு நடக்கவில்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார…

உள்ளாட்சி தேர்தல் பலி 37; மே. வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி?

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ரத்த ஆறு ஓடியிருக்கிறது. இதுவரை 37 பேர் கலவரத்தில் பலியாகியிருக்கின்றனர். இதனால், மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. பஞ்சாயத்து சமிதிகள்,…