‘மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பதால், தி.மு.க.வின் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கவலைப்பட வேண்டாம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திராவிடர் இயக்க முதுபெரும் சிந்தனையாளர் க.திருநாவுக்கரசு இல்ல திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

‘‘மத்தியில் நடைபெறும் மோசமான சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறியத்தான் பீகார் மாநிலம் பாட்னாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினோம். அடுத்ததாக ஜூலை 17,18-ல் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஆலோசனை நடைபெற உள்ளது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட யார் ஆட்சி இருக்கக் கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இருப்பதால் பிரதமர் மோடி பதற்றப்படுகிறார். இந்த பதற்றத்தில் தாம் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பிரதமர் மோடி உளறிக் கொண்டிருக்கிறார். பாஜகவை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் இம்மியளவும் கவலைப்பட வேண்டாம்’’ இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal