பருவமழை கொட்டித்தீர்த்ததன் காரணமாக இமாச்சல பிரதேசத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக  காட்சி அளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் மழையில் இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்த நிலையில் கனமழை அச்சுறுத்தல், வெள்ளத்தால் மாநிலம் தத்தளித்து வரும் நிலையில், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் ”அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். நாங்கள் 1100, 1070, 1077 ஆகிய மூன்று உதவி எண்களை அறிவித்துள்ளோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கியிருக்கும் நிலை ஏற்பட்டால் உதவிக்கு இந்த எண்களை அணுகலாம். உங்களுக்காக நான் எந்த நேரமும் உதவி செய்ய தயாராக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எம்.எல்.ஏ.-க்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முகாம் அமைத்து மக்களுக்கு உதவ கேட்டுக்கொண்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal