Month: June 2026

கரூர் செல்லும் முதல்வர் விஜய்! காத்திருக்கும் ட்விஸ்ட்!

முதலமைச்சர் விஜய் வருகிற 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கரூர் செல்கிறார். கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்கிறார். முதலமைச்சர் விஜய் வருகிற 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கரூர் செல்கிறார். கரூர் கூட்ட நெரிசல்…

திடீர் திருப்பம்… இண்டியா கூட்டணியில் தி.மு.க.!

‘இண்டியா’ கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய நிலையில், திடீரென்று போடப்பட்ட ஒரு கையெழுத்துதான் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், திமுக…

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு! தள்ளுபடி செய்யக்கோரி பதில் மனு!

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டசபை செயலாளர் சாந்தி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என அவர் கூறியிருக்கிறார். முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த மே 13-ந்தேதி…

மறைமுக அரசியலுக்கு முற்றுப்புள்ளி! நேரடி அரசியலில் ஜான் ஆரோக்கியசாமி!

த.வெ.க.வில் மறைமுக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நேரடி அரசியலில் களமிறங்கியிருக்கிறார் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி! தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒருவர் ஜான் ஆரோக்கியசாமி. அவரின் ஆலோசனைகள்தான் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது.…

தி.மு.க.வா? த.வெ.க.வா..? எஸ்.பி.வேலுமணி தீவிர யோசனை..!

கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணியும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறாராம். எஸ்.பி.வேலுமணியிடம் தி.மு.க. , த.வெ.க. என இரண்டு தரப்பும் தங்கள் கட்சியில் இணையுமாறு பேச்சு…

அரசு ஒப்பந்தங்கள்… அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ‘Strict Order’!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன், ‘த.வெ.க. ஒரு தூயசக்தி… மக்கள் பணத்தை ஒரு பைசா கூட தொடமாட்டேன்… தொடவும் விடமாட்டேன்..!’ என வாக்குறுதி கொடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த விஜய், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்களுக்கு ஒரு விஷயத்தில் ‘ஸ்ட்ரிக் ஆர்டர்’…

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

சட்டமன்றத்தில் அட்லி வசனம் பேசிய ‘மாஜி’ மீது வழக்குப் பதிவு!

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் த.வெ.க. அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆட்லி வசனம் குறித்து ஆவேசமாக பேசிய நிலையில், வேலை வாங்கித் தருவதாக பணமோசடி வழக்கில் இன்று அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக முன்னாள்…

பி.டி.அரசகுமார் மீது பள்ளி நிர்வாகத்தினர் புகார் கொடுக்க போலீஸ் வேண்டுகோள்!

தனியார் பள்ளிகளிடம் நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை ஏமாற்றியதால் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார் மீது பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் புகார் கொடுக்கலாம் என சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார்…

தனி ‘மெஜாரிட்டி’யை நோக்கி த.வெ.க! அதிமுகவில் மீண்டும் குழப்பம்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி கோவையில் நடத்திய ஆலோசனைக் கூட்டம்தான் அ.தி.மு.க.வில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியடைந்தது. இதனால், அதிருப்தியில் இருந்த 25 எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தனர். இதனால்…