மிகவும் நீளமான கடற்கரையாக திகழும் மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை தமிழக அரசு சில நாட்களுக்கு முன் திறந்து வைத்தது.

சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் 1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் மாண்டஸ் புயலின் காரணமாக மெரினா கடற்கரையில் அதிவேகமாக காற்று வீசியது.

அதோடு கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டதால் சிறப்பு பாதை முற்றிலும் சேதம் அடைந்து காணப்பட்டது.

அதே சமயம் இன்னும் கூடிய விரைவில் சரி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அதன் ஒருபகுதியாக இன்றைய தினத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையில் தேங்கி இருந்த மணலை ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர்.இந்த சூழலில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை திறக்கப்படும் என அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் மெரினாவை காண்பதால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

By Divya