மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அடுத்த சிக்கந்தர் கம்பூ பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி குஷ்வாஹா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் கமலா ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து 4 கால்களுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதோடு 2.4 கிலோ எடையுடன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை குழுமத்தின் மேலாளர் டாக்டர் ஆர்.கே.எஸ் தாகத் கூறுகையில் பொதுவாகவே 4 கால்களுடன் குழந்தை பிறப்பது அரிதான நிகழ்வு என தெரிவித்தார்.குழந்தையின் 4 கால்களில் 2 கால்கள் ஊனமுற்றதாகவும், 2 கால்கள் மட்டுமே செயல்படும் என தெரிவித்தார். இதற்கு அறிவியலில் இஸ்கியோபாகஸ் என்று அழைக்கப்படுகிறது.

அதாவது கரு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும் போது குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதி இரண்டு கூடுதல் கால்களுடன் வளரும் என தெரிவித்தார். இருப்பினும் பெரும்பாலானவைகளில் 2 கால்கள் செயலற்று காணப்படும் என தெரிவித்தார்.

By Divya