பா.மா.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார், நாமக்கள் தி.மு.க. மா.செ. மீது அவதூறு கிளப்பியதால் ரூ.1 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளகுறிச்சி கள்ளச்சாரய பலிகளை தொடர்ந்து, 21 ந் தேதி தனியார் தொலைகாட்சி நடத்திய விவாதத்தில் பாமக முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் கலந்து கொண்டார். அதில் ரெண்டு மாதத்துக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் போலி மது ஆலை பிடிப்பட்டதில் திமுகவினருக்கும், திமுக மா.செயலாளர் மதுரா செந்திலுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆட்சியாளர்கள் எந்த நடவடைக்கையும் எடுக்கவில்லை என்று பேசியிருந்தார்.

இதை எதிர்த்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட எஸ்.பி க்கும், கணேஷ்குமாருக்கும் விவாதம் நடத்திய தனியார் டிவிக்கு 1 கோடி இழப்பீடு கேட்டு திமுக மாவட்ட வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் தனகரன் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த விவகாரத்தில் தொடர்ந்து வதந்தி பரப்பபடுவதால் மாவட்ட ராஜேஸ் கண்ணாவும் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்திருக்கிறார்.

‘ போலி மது ஆலை தேவனாங்குறிச்சி என்ற இடத்தில் கண்டறியபட்டது. இதை கண்டுபிடித்தது லோக்கல் போலீஸ் இல்லை. மதுவிலக்கு மாநில பிரிவின் ஸ்பெஷல் விங். அதில் மாட்டியவர்கள் எல்லாருமே ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். ஜெயிலுக்கு போன ஒரு நபர், அந்த ஏரியா திமுக ஒன்றிய செயலாளர் ஊர்காரர் என்பதால் திமுகவுக்கு தொடர்பு என்று கிசுகிசுக்கபட்டது. அப்போதும் கூட மா.செயலாளர் மதுரா செந்திலுக்கும் அதுக்கும் எள்ளளவு சம்மந்தம் கிடையாது. போலி மதுபான ஆலை விசயத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் யார் பெயரிலும் எப்.ஐ.ஆர் இல்லை.

ஸ்பெஷல் டீம் சந்தேகமிருப்பதாகவோ, விசாரணைக்கு கூட அழைக்கவில்லை. இது ஒருபுறமிருக்க சம்பவம் நடந்த இடம் பரமத்தி வேலூர் என்றும் கணேஷ்குமார் மாற்றி விவாதத்தில் பேசியிருக்கார். அரை குறை அறிவோடு திமுக மேல் குற்றஞ் சாட்ட வேண்டும் என்ற வன்மத்தோடு பேசுவது நேர்மையா? விவாதத்தில் உட்காரும்பொழுது முழு தகவல்களை சரியாக பேச வேண்டாமா?

திமுகவை டேமேஜ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக பேசுவது சரி. அதுக்காக பொதுசபையில் கணேஷ்குமார் உண்மையில்லாத தகவல்களை பேசுவது சரியில்லை. இதை பற்றி வதந்தி பரவும்போதே மாவட்ட கலெக்டரும் எச்சரிக்கை அறிவிப்பு விட்டது கணேஷ்குமாருக்கு தெரியுமா?. வாயை கொடுத்து எங்ககிட்ட வாங்கி கட்டிக்க கூடாது.’ என்று கணேஷ்குமாருக்கு எதிராக பொங்கி தீர்க்கிறார்கள் நாமக்க மேற்கு மாவட்ட தொண்டர்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal