ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.பழனிச்சாமி என்பவரது வீட்டில் 600 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை தமிழக போலீஸார் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து காவல்துறையை சேர்ந்தவர்களே சிலை வாங்குவதை போல் () பழனிசாமியை அணுகினர்.
சிலை வைத்திருப்பது உறுதியானதையடுத்து, சிலையின் விலை ரூ .33 கோடி என அதிகாரிகளிடம் பழனிசாமி கூறிய நிலையில், அதிகாரிகள் அதை இறக்கி ரூ.15கோடிக்கு நிர்ணயம் செய்தனர்.
இதனை அடுத்து 22.8 கிலோ எடையும், 58 சென்டிமீட்டர் உயரமும், 31 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட சிலையை காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் பாண்டியராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் நாகேந்திரன், தலைமைக் காவலர் பரமசிவம் சிவபாலன் மகாராஜன், காவலர் ராஜேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார் சிலையை பறிமுதல் செய்தனர்.
சிலையின் அசல் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், கர்நாடகாவில் உள்ள மந்தியா எனும் கோவிலில் உள்ள பூசாரியிடம் விசாரித்தபோது இந்த சிலை அந்த கோவிலுக்கு சொந்தமானது என்று கண்டறிந்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பழனிசாமி கைது செய்யப்படுவார் என்றனர்.