மழை காலத்தின்போது நாம் நம் உடல் நிலையை பராமரித்து கொள்ளவது மிகவும் அவசியம். நோய் தொற்றுகலும் கிருமிகளும் அதிகம் பரவும் பருவ காலம் இது. ஆதலால் ஒரு சில உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும்.
வெளியே சாப்பிடுவதை தவிர்க்கவும்!!!
ஈரப்பதமான சூழ்நிலையில் விற்கப்படும் இந்த பேல் பூரி, பானி பூரி போன்ற உணவுகள் கிருமிகளை எடுத்துக் கொண்டு அவற்றின் இயற்கையான ஊட்டச்சத்துக்களை இழப்பதால் உடல்நலக் கேடு ஏற்படும். மேலும் வெளியே நாம் சாப்பிடும் உணவுகளில் தண்ணீர், மசாலா பொருட்கள் அனைத்தும் சுகாதாரமாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மழைக்காலம் முடியும் வரை வெளியே சாப்பிடுவதை முடிந்த வரை தவிர்த்துக்கொள்வது நல்லது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்!!!
பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சிகள் இன்ஸ்டன்ட் உணவுகள் மற்றும் அமில தன்மை கொண்ட புளிப்பு சுவை கொண்ட உணவுகள், மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் உப்பு அதிகம் கொண்ட உணவுகள் அஜீரணம், அமில மிகைப்பு மற்றும் வீக்கம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
எளிதாக செரிக்கும் உணவை எடுத்துக்கொள்ளவும்!!!
வேக வைத்த காய்கறிகள், சாலட்கள், பழங்கள், பாசிப்பருப்பு, சோளம் போன்றவை உங்கள் செரிமான அமைப்பிற்கு ஏற்ற உணவுகளாகும். பருப்பு வகைகள் தானிய வகைகளான உணவுகள் எடுத்துகொல்வது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
மூலிகை தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம்!!! இங்கு உள்ள ஆயுர்வேத பானம் உங்கள் செரிமானத்திற்கு உதவுகிறது: சூடான தண்ணீரில் மிளகு, இஞ்சி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து,ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.
இவற்றை நாம் பின்பற்றினாலே மழைக்காலத்தில் நோயின் தாக்கத்தில் இருந்துவிடுபட்டு, மழைக்காலத்தை சந்தோஷமாக கழிக்கலாம்.