இன்று மாலை 6.30 மணிக்கு ’வாரிசு’ படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ (ஃபஸ்ட் சிங்கிள்) படக்குழுவால் வெள்ளியிடவிருக்கிறது. தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், பாடல் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

 ரஞ்சிதமே... ரஞ்சிதமே எனத் தொடங்கும் அப்பாடலை விஜய் மற்றும் மானசி எம்எம் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் விவேக் இப்பாடலை எழுதியிருக்கிறார். எப்போதும் போல விஜய் இப்பாடலில் தாறுமாறான நடனத்தை கொடுத்திருக்கிறார் எனத் தெரிகிறது.மொத்தம் 30 விநாடி அளவில் இந்த ப்ரோமோ பாடல் வெளியாக உள்ளது. 
 வாரிசு படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளதாலும் வாரிசு படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 
 

By Divya