தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து இன்றுவரை புகழின் உச்சத்தில் இருக்கும் இரு துருவங்கள் மோதிகொள்ளும் பொங்கல்!!!!!


காலங்காலமாக அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே போர்க்களம் நீண்டு கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்ப இருவரின் படங்களும் மோதிக் கொள்வதும் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் தற்போது வாரிசு, துணிவு இடையிலான போர்க்களம் துவங்கிவிட்டது. 9 ஆண்டுகளுக்குப்பிறகு அஜித் - விஜய் படங்கள் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், இன்றிலிருந்து ட்விட்டரில் பொங்கல் பண்டிகை கலைக்கட்ட தொடங்கியுள்ளது. 


'பீஸ்ட்' படத்திற்கு பிறகு விஜய், இயக்குநர் வம்சியுடன் கைகோத்திருக்கிறார். தமிழ் - தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகும் 'வாரிசு' படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார். இரண்டு தரப்பு ஆடியன்ஸைகளை திருப்திபடுத்தும் வகையில் படம் உருவாகியுள்ளதாக படத்தின் இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார். 

'வலிமை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்திருக்கிறார் நடிகர் அஜித். வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'துணிவு' படம். 

எதிர்பார்ப்பின் உச்சத்தை தொடும் "வாரிசு / துணிவு " 
ரசிகர்களை மேலும் ஆர்வத்தோடு காத்திருக்க வைக்கிறது.

By Divya