சுந்தர் சி இயக்கத்தில்இப்படத்தை குஷ்பு தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், டிடி, ரைசா வில்சன், யோகிபாபு, சம்யுக்தா, ரெடின் கிங்ஸ்லி, மாளவிகா ஷர்மா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். ஜீவா, ஜெய், ஸ்ரீ காந்த் ஆகிய மூன்று பேரும் அண்ணன் தம்பிகள், டிடி தங்கை. கல்யாணம் முடிந்த நிலையில், ஸ்ரீகாந்துக்கு மனைவியின் மீது மோகம் குறைந்து விட, அவர் மனம் வெளியில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம், நல்ல வேலையில் வசதியாக இருக்கும் ஜீவாவை, அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஐஸ்வர்யா ஏமாற்றி கழற்றி விடுகிறார்.
மற்றொரு பக்கம், சிறுவயதில் இருந்து, தன்னை உருகி உருகி காதலித்த நண்பியின் காதலை புரிந்து கொள்ளாமல், அவருக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்று தெரிந்தவுடன், அவரின் காதலை புரிந்து கொள்ளும் ஜெய், அவர் எப்படியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.
சுந்தர் சி படங்கள் என்றாலே காமெடிக்கு கேரண்டி இருக்கும். அதேபோல் இப்படத்திலும் இண்டர்வெல்லுக்கு முன் ஒரு அரை மணிநேரத்திற்கு வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கு காமெடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் கிளாமர் வழக்கம்போல் இப்படத்திலும் சற்று தூக்கலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கிளாமர், பாடல், காமெடி என தன்னுடைய வழக்கமான டெம்ப்ளேட் ரூட்டையே இதிலும் பின்பற்றி கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி.