ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன்!
சிறுவன் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்திக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் தர ஐகோர்ட் மறுத்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, கோட்டீஸ்வர் சிங் அமர்வு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.