தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருக்கிறது. தவிர, சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளின் (தலா 2 எம்.எல்.ஏ.க்கள்) ஆதரவை விஜய் கோரி இருந்தார். இவர்கள் நாளை தங்களது முடிவுகளை தெரிவிப்பதாக கூறியிருந்தனர். இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் த.வெ.க.வுக்கு 112 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. எனவே, 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தது.

த.வெ.க. தரப்பில் பதவியேற்ற பிறகு தங்களது முழு ஆதரவை (118 எம்.எல்.ஏ.க்கள்)சட்டமன்றத்தில் நிரூபிக்கிறோம். தற்போது முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுக்கும்படி கோரப்பட்டது. ஆனாலும், கவர்னர் மாளிகை 118 பேர் கொண்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை கொடுங்கள். சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தேவையில்லை என்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் , விஜய் இன்று பதவியேற்பது தள்ளிப்போனது.

இந்த நிலையில்தான் இரண்டாவது நாளாக இன்று சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்து பேசினார்.

சுமார் 45 நிமிடங்கள் ஆளுநரை சந்தித்துப் பேசினார். ஆட்சி அமைப்பது குறித்து சில விளக்கங்களை ஆளுநர் கேட்டு பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என்று தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal