‘‘அன்புமணியின் ஆதரவாளர்களால் என்னைப் போன்றவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’’ என்று பாமக எம்​எல்ஏ அருள் ‘பகீர்’ கிளப்பியிருக்கிறார்.

சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அருள் எம்.எல்.ஏ, ‘‘ ராம​தாஸைப் பற்றி எவருமே சொல்​லாத, சொல்​லத் தயங்​கிய வார்த்​தைகளை அன்​புமணி பேசி​யது வேதனை அளிக்​கிறது. கொலை, கொள்ளை வழக்​கில் உள்​ளவர்​கள், சாலை​யோரம் இலந்​தைப் பழம் விற்​பவர்​களுக்கு ராம​தாஸ் பொறுப்​பு​களை வழங்​கி​யிருப்​ப​தாக அன்​புமணி கூறி​யுள்​ளார். பாட்​டாளி வர்க்​கத்​தினரை அன்​புமணி இழி​வுபடுத்தி விட்​டார்.

ராம​தாஸைச் சுற்றி 3 தீய சக்​தி​கள் இருப்​ப​தாக அன்​புமணி கூறுகிறார். ஆனால், அன்​புமணி​யைச் சுற்​றித்​தான் தீய சக்​தி​கள் உள்​ளன. கடந்த 5 ஆண்​டு​களாக ராம​தாஸ் குழந்​தை​போல இருப்​ப​தாக அன்​புமணி விமர்​சித்​துள்​ளார். எனில், 3 ஆண்​டு​களுக்கு முன்பு பாமக தலை​வ​ராக அன்​புமணியை ராம​தாஸ் அறி​வித்​தது எப்​படி செல்​லும்? ராம​தாஸ் பின்​னால் வன்​னியர்​கள், சிறு​பான்​மை​யினர், வாக்​காளர்​கள் இருக்​கின்​றனர். ஆனால், அன்புமணி​யின் பின்​னால் கட்சி நிர்​வாகி​கள் மட்​டுமே உள்​ளனர்.

சேலத்​தில் அன்​புமணி போட்டியிட்​டால், அவரது வெற்​றிக்​காக நான் உழைப்​பேன். அன்​புமணியின் ஆதர​வாளர்​களால், என்​னைப் போன்​றவர்​களின் உயிருக்கு ஆபத்து ஏற்​பட்​டுள்​ளது. 2026 தேர்​தலில் ராம​தாஸ் வெற்​றிக் கூட்​ட​ணியை அமைப்​பார். எதிர்​கால பாமக அன்​புமணிக்​குத்​தான். இதில் மாற்​றம் இல்​லை. ஆனால், அன்​புமணி பொறுத்​திருக்க வேண்டும்’’ இவ்​வாறு அவர் கூறி​னார்​.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal