Month: July 2023

சோனியாகாந்தி மேல்சபை எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ! !

காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியாகாந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக உள்ளார். 2004-ம் ஆண்டில் இருந்து அவர் அந்த தொகுதியில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதற்கு முன்பு 1999-ல் அமேதி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்தநிலையில்…

மணிப்பூர் விவகாரம் : 26-ந்தேதி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் – கே.எஸ்.அழகிரி

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். மெழுகு வர்த்தி ஊர்வலத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திட வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின…

கவர்னர் மாளிகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எண்ணித் துணிக என்ற திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழில் முனைவோர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி சென்னை கவர்னர் மாளிகையில் இன்று இளம் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில்…

1000 ரூபாய்க்கு ஆயிரதெட்டு நிபந்தனைகள்; தி.மு.க.வினருக்கே
விண்ணப்பப் படிவம் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

அ.தி.மு.க. நூற்றாண்டு பொன்விழா மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்த ஏற்பாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் கொண்டு வருவது குறித்து தீர்மானக் குழு ராயப்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசித்தது. இந்த…

மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க 36 ஆயிரம் முகாம்கள்- தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை…

வாக்காளர் சரிபார்க்கும் பணி, ஒத்துழைப்பு தாருங்கள் – பொது மக்களுக்கு மாநகராட்சி அறிவிப்பு.

சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வரும் 5.1.2024-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை…

ஆன்லைனில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 6326. இதே போல அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ…

‘யார் அடிமை?’ ஆவேச எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து கட்சிக்கொடி ஏற்றினார். கோரணம்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது…

தங்கத்திற்கு ‘ஜாக்பாட்’! கண்ணப்பனுக்கு கல்தா!

சமீபகாலமாகவே அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ‘ஜாக்பாட்’ அடித்து வருகிறது. அதே சமயம் ராஜ கண்ணப்பனுக்கு தொடர்ந்து ‘கல்தா’ கொடுக்கப்பட்டுவருவதுதான் அறிவாலயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை மாவட்ட திமுகவிலிருந்து நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அண்ணா அறிவாலயத்துக்கு பஞ்சாயத்துகள் வந்த வண்ணம் இருந்ததால்…

அமித் ஷா – ஜெய்சங்கருக்கு கொலை மிரட்டல்?

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு ஒரு பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இந்தியாவில் இருந்து பஞ்சாப் பகுதியைப் பிரிப்பதற்காக பிரச்சாரம் செய்யும் கனடாவைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்…