தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எண்ணித் துணிக என்ற திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழில் முனைவோர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி சென்னை கவர்னர் மாளிகையில் இன்று இளம் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளம் தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், தொழில் சார்ந்த துறைகளில் உள்ளவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:-

130 கோடி மக்கள் உள்ள நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்கமுடியாது. நாடு வளர்ச்சி அடையவேண்டுமெனில் நாம் ஒவ்வொருவரும் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் இருந்தவர்கள் நம்மை பின்னோக்கி அழைத்து சென்றனர். ஆளுநருக்கு அதிக வேலை இருக்கும் என்று மக்கள் முன் மாயை உள்ளது. ஆனால் எனக்கு அதிக வேலைகள் இல்லை. நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal