கவர்ச்சி நடிகையாக தன் பயணத்தை தொடங்கிய யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அதிக புகழ்பெற்றார். அதைத்தொடர்ந்து விபத்து, தோழியின் மரணம் என பல பிரச்சனைகளில் சிக்கி மீண்டு வந்த அவர் இப்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் அம்மணியின் கைவசம் இப்போது ஏராளமான படங்கள் இருக்கின்றன. இந்த பிசியான நிலையிலும் இவர் 45 வயது நடிகரின் மேல் காதலில் விழுந்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அஜித் மச்சானும், ஷாலினியின் சகோதரருமான ரிச்சர்ட் ரிஷி இத்தனை வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
இது குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது அவர் தான் சோசியல் மீடியா பக்கத்தில் இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் யாஷிகா அவரை இறுக்கி அணைத்து முத்தம் கொடுப்பது போன்ற ஒரு போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார்.
அதிலும் சூரிய ஒளி அவர்கள் மேல் படும்படியாக அந்த போட்டோ இருக்கிறது. அதைத்தொடர்ந்து அடுத்ததாக ஒரு போட்டோவை வெளியிட்டு முத்தத்திற்கு பிறகு எடுத்த போட்டோ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இருவரும் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட போது இந்த போட்டோ எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிகிறது.
இதுதான் தற்போது சோசியல் மீடியாவை ரணகளம் ஆக்கி வருகிறது. இதன் மூலம் அவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் அவர்களின் நெருக்கத்தை பார்த்தால் இது நிச்சயம் பட ப்ரமோஷன் ஆக இருக்க வாய்ப்பே கிடையாது. இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த போட்டோவை பார்த்த பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் ஏற்கனவே யாஷிகா பிரபல ஹீரோ ஒருவருடன் நெருக்கும் காட்டி வருகிறார் என்று கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.