உலக அழகியான ஐஸ்வர்யா ராயின் நடிப்பில், தன்னை வியக்க வைத்த நடிப்பு பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் அவரது கணவர் அபிஷேக் பச்சான்..!

பாலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அபிஷேக் பச்சன். இவர் நடிப்பில் யுவா, தூம், சர்க்கார், குரு ஆகிய படங்கள் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை பெற்று தந்தது. இந்நிலையில் தன் மனைவியான ஐஸ்வர்யாவின் நடிப்பை பெருமைப்படுத்தி பேசி பரபரப்பை உண்டுபடுத்தி வருகிறார்.

உலக அழகியாக வலம் வந்தவர் தான் ஐஸ்வர்யா ராய். அதன்பின் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் இவர் ஹிந்தி மற்றும் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழில் எந்திரன், ராவணன் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது.

அதைத்தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வனின் நந்தினி கதாபாத்திரம் மூலம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறார். மேலும் இப்படம் வரலாற்று படம் என்பதால் அதற்கு ஏற்ப இவரின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். இதை தொடர்ந்து பல படங்களில் கால்ஷீட் கொடுத்து வருகிறார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் அபிஷேக் பச்சன் தன் மனைவியின் நடிப்பினை குறித்து பெருமையாக பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இத்தகைய செய்தி இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதைத்தொடர்ந்து குறிப்பிடத்தகுந்த படங்களில் மூலம் தமிழில் ஆதர்ச நாயகியாக மாறினார் ஐஸ்வர்யா எனவும் அவர் கூறினார்.

மேலும் அவர் நடிப்பில் பல படங்கள் கொடுத்திருந்தாலும் தனக்கு பிடித்த படம் பொன்னியின் செல்வன் தான் எனவும். அதில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த தன் மனைவியின் நடிப்பை கண்டு வியந்து போனதாகவும் கூறி பெருமிதம் பட்டார். மேலும் இந்த வரலாற்று கதாபாத்திரம் இவருக்கு பொருத்தமாக உள்ளதாகவும் தன் கருத்தினை வெளிப்படுத்தினார்.

தன் மனைவியின் நடிப்பை கண்டு இவரா இது என வியந்து போனதாகவும். மேலும் இப்படத்தில் இவரின் நடிப்பு கூடுதல் சிறப்பை பெற்றதாகவும் கூறினார் அபிஷேக் பச்சன். இதுவரை இவரின் இத்தகைய திறமையை கண்டு நான் பாராட்டியதே இல்லை எனவும் கூறினார். இத்தகைய பாராட்டுகளை தன் கணவனிடம் இருந்து பெற்று, பெருமிதம் அடைந்து வருகிறார் ஐஸ்வர்யா.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal