தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஷிவானி, கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கர், ரெட்டை ரோஜா போன்ற தொடர்களில் நாயகியாக நடித்து சின்னத்திரையில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வந்தவர் ஷிவானி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தான் நடிகை ஷிவானியை மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆக்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை ஷிவானிக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் படையெடுத்து வருகின்றன.

அந்த வகையில் ஷிவானி முதன்முதலில் நடித்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஷிவானி. இதையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டிஎஸ்பி போன்ற படங்களில் நடித்த ஷிவானி, முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் பம்பர். இப்படத்தில் நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஷிவானி. இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக நடிகை ஷிவானி, கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் நடிகை ஷிவானிக்கு 40 லட்சத்துக்கு அதிகமான பாலோவர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்க தொடர்ந்து அதில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார் ஷிவானி.

அந்த வகையில், தற்போது கடற்கரையோரம் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்தபடி நடிகை ஷிவானி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பிங்க் நிற சேலை அணிந்து கடற்கரை மணலில் படுத்தபடி கன்னாபின்னானு கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நடத்தியுள்ள அந்த போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal