‘பத்து நிமிடம் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஒத்துக்கிட்டால் போதும்…’ என நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மலையாள திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். 40 வயதைக் கடந்துவிட்டபோதிலும், முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தமிழிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். அந்த வகையில் தனுஷின் அசுரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன துணிவு படத்தில் நடித்து அஜித்துடன் நடித்து அசத்தி இருந்தார். இதையடுத்து மலையாள படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் மஞ்சு வாரியர்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பதால், மஞ்சு வாரியருடன் நடிக்க வேண்டும் என்பது பல இளம் நடிகர், நடிகைகளின் கனவாக உள்ளது. அப்படி மஞ்சு வாரியரின் தீவிர ரசிகையாக இருப்பவர் தான் நடிகை மாளவிகா ஸ்ரீநாத். மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான இவரை மஞ்சு வாரியரின் மகளாக நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்து சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நடிகை மாளவிகா ஸ்ரீநாத் கூறியதாவது, “சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படத்தில் மஞ்சு வாரியரின் மகளாக நடிக்க வருமாறு அழைப்பு வந்தது. மஞ்சு வாரியர் படம் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. அதனால் நானும், என் தங்கை மற்றும் தாயை அழைத்துக் கொண்டு அதற்கான ஆடிசனுக்கு சென்றேன். ஒரு தனி அறையில் ஆடிசன் டெஸ்ட் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த நபர் என் தலைமுடி சரியாக இல்லை என்றும், பக்கத்து அறைக்கு சென்று அதை சரிசெய்துவிட்டு வருமாறும் கூறினார்.

நான் அந்த அறைக்கு சென்றதும் என்னை பின் தொடர்ந்து வந்த அந்த நபர் என்னை கட்டிப்பிடித்தார். நான் அவரின் பிடியில் இருந்து விடுபட முயன்றபோது, 10 நிமிஷம் மட்டும் அட்ஜஸ்மெண்ட் செய்தால் போதும், மஞ்சு வாரியரின் மகளாக நடிக்கும் வாய்ப்பை உனக்கே தருகிறேன் என கூறினார். நான் உடனே அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன். இப்போ நினைச்சாலும் அது பயங்கரமான அனுபவமாக இருக்கிறது” என மாளவிகா தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal