தமிழ் திரைப்பட நடிகைகள் பற்றி அவ்வப் போது பகீர் கிளப்பி வரும் பயில்வான் ரங்கநாதன், தற்போது சினேகாவைப் பற்றி பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான புன்னகை இளவரசி சினேகா, தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அதிலும் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் ஜோடியாக நடித்தனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இதை அடுத்து சினேகாவும் மாடலிங் மற்றும் படங்களின் பிரிவியூ ஷோக்கள் போன்றவற்றுக்கு பிரசன்னா உடன் இணைந்து பங்கேற்றார். முதலில் தங்கள் காதலை மறுத்த இவர்கள், அதன்பிறகு 2011ம் ஆண்டு இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் அறிவித்தனர்.

பிறகு 2012 ஆம் ஆண்டு பெற்றோரின் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இப்போது ஒரு மகனும், மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பிசியாக நடித்த வருகிறார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் பேட்டிகளில் பல நடிகைகளை மென்று தின்னு கொண்டிருக்கும் பயில்வான் ரங்கநாதன், இப்போது சிநேகாவையும் விட்டு வைக்கவில்லை. இவர் எப்படி பட வாய்ப்புகளை பெற்றார் என்பதை நக்கலாக பேசியுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் சினேகா எல்லா நடிகர்களுடன் நடித்த உச்ச நட்சத்திரம்.
சினேகா முதலில் மலையாள படங்களில் அதிகமாக நடித்தார். இதனால் அடிக்கடி பார்ட்டி அதுவும் இரவு நேர பார்ட்டி என்றால் கண்டிப்பாக சினேகாவை பார்க்க முடியும். இதன் மூலம் முக்கியமானவர்களை தன் கைக்குள் வைத்துக் கொண்டு எளிதாக வாய்ப்புகளை பெற்றார் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் கூறியுள்ளார். இப்படித்தான் இவர் எப்போதுமே சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு பிரபலத்தை பற்றி பேசி பரபரப்பு கிளப்புகிறார்.
தற்போது சினேகாவை பக்கம் திரும்பியுள்ளார். படங்களில் மட்டுமல்ல பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் சினேகா, எப்போதுமே ஹோம்லி லுக்கில் இருக்கும் அவருக்கு இப்போதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சினேகா நைட் பார்ட்டி மூலம் பலரையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் பட வாய்ப்பு பெற்றிருக்கிறார் என பயில்வான் பகிரங்கமாக பேட்டியின் மூலம் தெரிவித்திருப்பது பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.