‘எவன் எவக் கூட இருந்தா எனக்கென்ன… காதலின் மரியாதை புரியாதவர்கள் பற்றி….’ என முன்னாள் கணவர் பற்றி கேள்விக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் நடிகை சமந்த..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சினிமாவில் டாப் கியரில் சென்றுகொண்டிருந்தபோதே திருமணம் செய்துகொண்டார். நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா, கடந்த 2021-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பின்னர் சினிமாவில் செம்ம பிசியாகிவிட்டார் சமந்தா.

மறுபுறம் நாகசைதன்யாவும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தாலும், அடிக்கடி நடிகைகளுடன் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அண்மையில் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா உடன் லண்டனுக்கு சுற்றுலா சென்று அங்கு இருவரும் டேட்டிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரல் ஆகின. இதுகுறித்து நாக சைதன்யா எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தை குணசேகரன் இயக்கியுள்ளார். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். சாகுதலம் படத்தின் புரம்மோஷன் பணிகள் தற்போது பிசியாக நடந்து வருகிறது. அதில் விவாகரத்துக்கு பின் நாக சைதன்யா நடிகையுடன் டேட்டிங் செய்து வருவது குறித்து நடிகை சமந்தாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு சமந்தா கூறியதாவது : “எவன் எவகூட டேட்டிங் செய்தால் எனக்கென்ன, நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது” என காட்டமாக பதிலளித்துள்ளார் சமந்தா.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal