விமானத்தில் வந்துகொண்டிருந்த போது, இடுப்பில் கை வைத்த வாலிபருக்கு கன்னத்தில் பளார்… பளார்… என்று சீரியல் நடிகை சீரியஸாக அடித்த விஷயம் தற்போது வெளிவந்திருக்கிறது.
சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் திவ்யா கணேஷ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்கிற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் செம்பருத்தி என்கிற கேரக்டரில் நடித்த இவர் பின்னர் லட்சுமி வந்தாச்சு சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதையடுத்து இவர் நடித்த சுமங்கலி தொடர் தான் திவ்யாவை பேமஸ் ஆக்கியது. அந்த சீரியலில் அனு சந்தோஷ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திவ்யா. பின்னர் 2022-ம் ஆண்டு விஜய் டிவியில் ஆரம்பமான பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கத் தொடங்கினார் திவ்யா கணேஷ். இந்த சீரியலில் ஜெனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சீரியலைத் தவிர படங்களிலும் நடித்திருக்கிறார் திவ்யா. குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த அட்டு என்கிற படத்தில் திவ்யா நடித்திருந்தார். இப்படம் பெரியளவில் வெற்றியடையாததால், சீரியலிலேயே கவனம் செலுத்த தொடங்கிய திவ்யா, தற்போது சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் ஃபேன்ஸ் மீட் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை திவ்யா கணேஷ், விமானத்தில் பயணிக்கும் போது தனது ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து பேசினார். அதன்படி, ஒருநாள் இரவு நேரத்தில் ஐதராபாத்தில் இருந்து விமானத்தின் மூலம் சென்னை வரும்போது, என் இடையில் ஏதோ ஓடுவதுபோன்று ஒரு உணர்வு இருந்தது. இதையடுத்து பார்த்தபோது எதுவுமே இல்லை.
பின்னரும் அதேபோன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது தான் ஒரு நபர் இந்த கேவலமான செயலை செய்தது தெரியவந்தது. இதனால் செம்ம டென்ஷன் ஆகிவிட்டேன். உடனடியாக எழுந்து அந்த நபருக்கு கன்னத்திலேயே 4 அறை பளார் பளார்னு விட்டேன். பிறருக்கும் இதுபோன்று சம்பவங்கள் நடக்கலாம். அந்த சமயத்தில் இதனை சகித்துக் கொண்டு கடந்து செல்லாமல், உடனடியாக அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.