கோலிவுட்டின் முன்னணி நடிகையான சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் ஒரு பட விழாவில் சமந்தா கலந்து கொண்ட போது எழும்பும் தொழுமாக ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்.

இதனால் சமந்தாவை பற்றி வெளியான கேலி, கிண்டலுக்கு தனது சமூக வலைத்தளத்தில் சரியான பதிலடி கொடுத்திருந்தார். இப்போது அந்த நோயிலிருந்து பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்துள்ள சமந்தா வேற லெவலில் வொர்க் அவுட் செய்து வருகிறார். அவரது புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் மிரட்சியில் உள்ளனர்.

சமந்தா நடிப்பில் தற்போது சகுந்தலம் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சில காரணங்களினால் தள்ளிப் போனது. இதைத்தொடர்ந்து வருண் தவான் உடன் சிட்டால் என்ற வெப் தொடரிலும் சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா இனிமேல் சினிமாவில் வரமாட்டார் என்று எண்ணிய பலருக்கு தற்போது மீண்டும் வந்துவிட்டேன் என இன்ஸ்டா பக்கத்தில் தினமும் ஸ்டோரி வெளியிட்டு வருகிறார். அதாவது சமந்தா எப்போதுமே தனது உடலை மிகவும் பிட்னஸ் ஆக வைத்துக்கொள்ளக் கூடியவர்.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்வதை ஒரு நாளும் விடமாட்டாராம். அதனால் தான் சமந்தாவின் உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மூலமாக மயோசிட்டிஸ் நோயிலிருந்த அவரால் சீக்கிரம் மீண்டு வர முடிந்தது. இப்போது அவர் மீண்டும் ஒரு போராளி என்பதை சமந்தா உடற்பயிற்சி செய்யவும் வீடியோ மூலம் தெரிகிறது.

மேலும் மீண்டும் சிங்க பெண்ணாக வந்துள்ள சமந்தா அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். ஆகையால் மிக விரைவில் சமந்தா ஒப்பந்தமான படங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். சமந்தாவை பழையபடி பார்த்ததில் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal