‘திரைக்கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை’ என நடிகை பிந்து மாதவி ஓபனாக பேசியிருப்பது திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை பிந்து மாதவி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான கழுகு படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்த பிந்து மாதவி, தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா என ஹிட் படங்களில் நடித்ததால் அவருக்கான ரசிகர் வட்டமும் பெரிதானது.

இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுத்த பிந்து மாதவி இறுதிப்போட்டி வரை முன்னேறி நூலிழையில் டைட்டில் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார். தமிழ் பிக்பாஸில் டைட்டிலை நழுவவிட்டாலும், கடந்த ஆண்டு நடந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்று அசத்தினார் பிந்து.

தற்போது தமிழில் இவர் கைவசம் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய யாருக்கும் அஞ்சேல், சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய், மாயன் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட்டுகளை நடத்தி வாய்ப்பு தேடியும் வருகிறார் பிந்து மாதவி. சமீபத்திய பேட்டியில் நடிகைகள் நிர்வாணமாக படங்களில் நடிப்பது குறித்து பிந்து மாதவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், பட வாய்ப்புக்காக யாரும் நிர்வாணமாக நடிப்பதில்லை. கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் நிர்வாணமாக நடிப்பது தவறில்லை. அதுபோன்ற கதாபாத்திரம் எனக்கும் வந்தால் நானும் அப்படி நடிக்க ரெடி. ஆனால் ஒரு கண்டிஷன் கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே அப்படி நடிப்பேன் என நடிகை பிந்து மாதவி துணிச்சலாக பதிலளித்துள்ளார். முன்னதாக ஆடை படத்தில் அமலா பால், வட சென்னை படத்தில் ஆண்ட்ரியா, இரவின் நிழல் திரைப்படத்தில் ரேகா நாயர் ஆகியோர் நிர்வாண காட்சிகளில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal