‘நீங்கள் தமன்னாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்’ என பாலிவுட் நடிகை ரசிகர் ஒருவருக்கு வலைதளத்தில் பதிலடி கொடுத்த விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலிவுட் நடிகையான அதா ஷர்மா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 1920 எனும் ஹாரர் படத்தின் மூலம் பிரபலமானவர். அப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வெளியான Hasee Toh Phasee படத்தில் அதா ஷர்மா நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்திருக்கிறார் அதா ஷர்மா. தமிழிலும் சார்லி சாப்ளின் -2 படத்தில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் டிவிட்டர்வாசி ஒருவர் அதா ஷர்மாவை டேக் செய்து வினோதமான லவ் புரோபோசல் ஒன்றை வைத்திருந்தார். அதாவது ,‘‘ ‘யெஸ்’ என சொல்லுங்கள். இல்லையென்றால் நான் தமன்னா பாட்டியாவை திருமணம் செய்துகொள்வேன்’’ என அந்த நபர் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் அந்த நபருக்கு அதா ஷர்மா கொடுத்திருக்கும் ரிப்ளை தான் பலரையும் புன்னகை செய்ய வைத்திருக்கிறது. அதா ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில், “கனத்த இதயத்துடன் உங்களை விட்டு விலகுகிறேன். நீங்கள் தமன்னாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இருமணமும் இணைந்த திருமணமாக இருக்கட்டும்”என அதா ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை அதா ஷர்மாவிற்கு ரசிகர் ஒருவர் வித்தியாசமாக பிராபோசல் செய்திருந்த நிலையில் அதற்கு அதா ஷர்மா கொடுத்துள்ள பகடியான ரிப்ளை நெட்டிசன்களிடையே வைரலாக பரவி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal