நாளை ஞாயிற்றுக்கிழமை சன்னி லியோன் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருந்த நிலையில், மேடைக்கு அருகே குண்டு வெடிப்பு நடந்த சம்பவம்தான் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் ஆபாச நடிகையான சன்னி லியோன் இந்தி பிக் பாஸில் கலந்து கொண்டு அதன் பின்னர் இந்தி படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் கடந்த ஆண்டு இறுதியில் தமிழில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் லீடு ரோலில் நடித்து இருந்தார்.
மணிப்பூரில் உள்ள இம்பாலில் நடிகை சன்னி லியோனின் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கான அரங்கு அமைக்கும் ஏற்பாடுகள் இன்று தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்த பகுதியில் திடீரென ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை சன்னி லியோன் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி நடக்கும் இடம் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்று நடந்து ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கையெறு குண்டு விசப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
சம்பவ இடத்துக்கு போலீஸார் மற்றும் பாம் ஸ்குவாட் உள்ளிட்டோர் விரைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். திடீரென இப்படியொரு குண்டு வெடிப்பு நடக்க என்ன காரணம் என்று விசாரித்து வருகின்றனர். இதுவரை இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை.
சன்னி லியோன் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சிக்கான அரங்கை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்த நபர்கள் உள்பட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. சன்னி லியோன் நிகழ்ச்சியை தடை செய்யவே இந்த குண்டு வெடிப்பு நடந்ததா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நாளை நடைபெற உள்ள ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திடீரென அந்த பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நிலையில், நாளை நடைபெறுள்ள நிகழ்ச்சிக்கு சன்னி லியோன் வருவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.