‘எனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை இருந்தது’ என நயன்தாரா ஓபனாக பேசியிருப்பதுதான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்தியாவிலேயே நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துடன் திரையில் தோன்றி வரும் நயன்தாரா ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இந்த ஆண்டு அறிமுகமாகவுள்ளார்.

நடிகர் சிம்புவுடன் வல்லவன் படத்தில் படுக்கையறை காட்சிகளிலேயே நடித்து ரசிகர்களை திணறவிட்டு இருப்பார் நயன்தாரா. சூர்யாவின் கள்வனின் காதலி, ஜீவாவுடன் ஈ, விஷால் உடன் சத்யம் மற்றும் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு படத்தில் கவர்ச்சியின் உச்சிக்கே சென்று கதிகலங்க வைத்திருப்பார் லேடி சூப்பர்ஸ்டார்.

மலையாள தொலைக்காட்சி ஒன்றில் விஜேவாக பணியாற்றி வந்த டயானா மரியம் குரியன் மனசினக்கரே படம் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். நயன்தாராவாக சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நெருங்கி மிகப்பெரிய நடிகையாக மாறி உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை ஏற்பட்டதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

ஷாருக்கானின் ஜவான் மற்றும் ஜெயம் ரவியுடன் இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டதாக கூறியிருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதுவும் ஒரு பெரிய நடிகர் படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிடம் அப்படி அசிங்கமாக அணுகியுள்ளனர் என்பதை போட்டு உடைத்திருக்கிறார்.

சந்திரமுகி படத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடித்து சிவகாசி படத்தில் நான் சூப்பர் ஸ்டார் ஜோடி என ஆட்டம் போட்ட நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். இந்நிலையில், அவரையே ஒரு பெரிய நடிகர் படத்தில் நடிக்க வைக்க அட்ஜஸ்மென்ட் செய்யுமாறு அசிங்கமாக கேட்க, முடியாது என போல்டாக கூறி மறுத்துவிட்டேன். எனக்கு என் நடிப்பின் மீது நம்பிக்கை இருக்கு. தேவையில்லாமல் அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் பட வாய்ப்பை பெற வேண்டிய நிலை எனக்கு இல்லை என தனது பேட்டியில் கூறி உள்ளார் நயன்தாரா.

பல்வேறு நடிகைகள் இப்படி சினிமாவில் நிழலாடும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து சொன்னாலும், அதை எதிர்த்து குரல் கொடுக்க மறுக்கின்றனர். மேலும், யார் அந்த நடிகர் என்றும் எந்த படத்தில் இது போன்ற பிரச்சனை தங்களுக்கு ஏற்பட்டது என்பதையும் மறைத்து விடுவது மற்ற இளம் நடிகைகளுக்கும் சிக்கலாக மாறி வருகிறது என சினிமா ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal