நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில், நடிகர் யோகி பாபு குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று வழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதில், “வாழ்க்கையில் வெற்றி பெறுவதை காட்டிலும், வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகிபாபு வின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் நிகழ்வில் மகிழ்வுடன் கலந்துகொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விழாவில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal