நடிகைகள் குஷ்பு, நக்மா உள்ளிட்டோர் அரசியலில் புகுந்து அதிரடி காட்டி வரும் நிலையில், நடிகை திரிஷா காங்கிரஸில் சேரப்போவதாக தவல்கள் உலா வந்தத. இந்த நிலையில்தான் அரசியலில் நுழைவது… திருமணம் மற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் திரிஷா!
தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் திரிஷா. 96 படத்தின் வெற்றிக்கு பின் திரிஷா நடிப்பில் வெளிவந்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவின. இதனால் திரிஷாவின் கெரியர் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்து விமர்சித்தவர்களை வாயடைக்க செய்தார் திரிஷா.
பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம்பிடித்த திரிஷாவின் மார்க்கெட் அப்படத்துக்கு பின்னர் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய்யின் தளபதி 67 படத்திலும், அஜித்தின் ஏகே 62 படத்திலும் திரிஷா தான் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.
இது ஒருபுறம் இருக்க திரிஷா நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ராங்கி திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குனர் எம்.சரவணன் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற டிசம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது.
தற்போது ராங்கி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கும் திரிஷா, அதற்காக அளிக்கும் பேட்டிகளில் தன்னைப்பற்றிய சர்ச்சைகள் குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை திரிஷா அரசியலில் நுழைய உள்ளதாகவும், அவர் காங்கிரஸில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திரிஷா, நான் அரசியலில் நுழையப்போவதாக வந்த தகவல் துளியும் உண்மையில்லை. எனக்கும் அரசியலுக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை. அதேபோல் எப்போது திருமணம் என்கிற கேள்வியை என்னிடம் யாரும் கேட்கக்கூடாது என்பதை நான் விரும்புகிறேன்” என நடிகை திரிஷா கூறி உள்ளார்.