தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நடிகை மாளவிகா மோகனன் போடும் கண்டீசன்கள் மலைக்க வைத்திருக்கிறதாம்!

ரஜினி நடிப்பில் சென்ற வருடம் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார் மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கே சென்றார். ஆனால் தற்பொழுது மாஸ்டர் பட புகழ் மாளவிகா மோகன் இப்பொழுது ஃபீல் டவுட் ஆகியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தும் கூட தளபதி ரசிகர்களிடம் அதிக அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை இருந்தாலும் மாளவிகா மோகனன் தன்னை ஒரு தளபதி பட நாயகி ஆகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். தற்பொழுது இவர் கையில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அதிக படங்கள் கைவசம் இல்லாத நிலையிலும் கூட இவர் தமிழ் திரை உலகில் பெரிய நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் “தங்கலான்” படத்திலும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “மாறன்” படத்திலும் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் எல்லாமே பெரிய ஹீரோக்கள் கூட தான் ஜோடி சேர்ந்துள்ளார் .

தற்பொழுது வரை மாளவிகா மோகனன் நடித்த படங்களுக்கு இரண்டு கோடி வரை சம்பளமாக பெற்று வந்தார். பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்ததை வைத்து தன்னை டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு மனதில் கோட்டை கட்டிக் கொண்டிருப்பதால் தற்போது அவர் 5 கோடிகள் வரை அதிகமாக சம்பளம் கேட்கின்றார்.

ஒரு சில படங்களில் பெரிய ஹீரோக்களுடன் நடித்ததன் மூலம் பெயர் வாங்கவில்லை என்றாலும் அடுத்து ஒப்பந்தமாகும் படங்களுக்கு அதிக தொகையை கேட்பது கட்டுபடியாகாமல் இருக்கிறது என்று பெரிய நிறுவனமான லைக்கா இவரை ஒப்பந்தம் செய்ய தயக்கம் காட்டுகிறது .

இப்படி மாளவிகா மோகனன் போடும் கண்டிஷனுக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் தலை தெறிக்க ஓடுகின்றனர். இவர் இதே பிடியில் இருந்தால் இவருக்கு அடுத்து வரும் பட வாய்ப்பு தேடி வராது என்கிறார்கள் திரையுலகத்தினர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal