வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் சேர்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு அபராதம் விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்த பல ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரசிகர்கள் பலர் உற்சாக மிகுதியால் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்திய பின் ‘வாரிசு’ பட தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்று நேரு உள் விளையாட்டரங்க அதிகாரிகள் தெரிவித்து|ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.