‘வாரிசு’ படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ‘வாத்தி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் தட்டித் தூக்கியிருக்கிறது லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனம்!

தனுஷ் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் வாத்தி. இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் வெங்கி அர்லூரி இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் தனுஷ் வாத்தியாராக நடித்துள்ளார்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படம் முதலில் டிசம்பர் 2-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் படத்தின் பணிகள் முடிய தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அதன்படி இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தற்போது வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனை அந்நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal