நடிகை நயன்தாரா கவர்ச்சியாக நடித்தற்கு இதுதான் காரணம் என மனம் திறந்து பேசியிருக்கிறார்!

நடிகை நயன்தாரா இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

ஹாரர், திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள கனெக்ட் படத்தில், நயன்தாரா தனது கணவன், குழந்தை, அப்பா சத்தியராஜூடன் வசித்து வருகிறார். அப்போது, தனது மகளின் உடலில் ஏதோ ஒரு மாற்றத்தை நயன்தாரா கண்டுபிடிக்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்டிருந்தார். இந்த சிறப்பு பேட்டியை நயன்தாராவின் தோழியான டிடி பேட்டி எடுத்திருந்தார். இதில், பல சுவாரசியமான கேள்விக்கு நயன்தாரா பதிலளித்திருந்தார். இதில் பில்லா படத்தில் நடித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நயன்தாரா, இயக்குநர் விஷ்ணுவர்தனை தவிர, வேறு யாருக்கும் என் மீது நம்பிக்கை இல்லை. இது முழுக்க முழுக்க கிளாமரான ரோல் இதை இவங்க பண்ணுவாங்களா என்று நினைத்தார்கள். ஏன் அந்த தயக்கம் என்றால், அந்த நேரத்தில் நான் நடித்தது எல்லாமே, வில்லேஜ் டைப் மாதிரியான படத்தில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் தான் கொண்டிருந்தேன்.

எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் இருக்கு யாராவது இதை என்னால பண்ணமுடியாதுனு சொன்னாங்க என்றால் அது என் மனதிற்குள் உறுத்திக்கிட்டே இருக்கும், என்னால பண்ண முடியுமே, நான் கொஞ்சம் பண்ணிக்காட்டுகிறேன் பாருங்க என்று சொல்லுவேன் இது என்னுடைய பழக்கம். அப்படித்தான் பில்லா படத்தில் என்னாலையும் ஸ்டைலாக கவர்ச்சியாக நடிக்க முடியும் என்று நடித்துக்காட்டி நிரூபித்தேன் என்றார்.

சிவகாசி, சிவாஜி ஆகியப் படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடவும் அதுதான் காரணம். அப்போது பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு ஹிட் படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு வந்தது. ஸ்பெஷல் பாடலாக இருந்ததால், நானும்ஸ்பெஷல் பாடலுக்காக கூப்பிடுகிறார்கள், அது நல்லா தான் இருக்கும் என்று புதுசா முயற்சி செய்தேன் என்றார்.

இதற்கிடையே, ‘கனெக்ட்’ திரைப்பட பிரமோஷனுக்கு நயன்தாரா கலந்துகொண்டும், அப்படம் சொல்லிக் கொள்ளும்படியாக வசூலை குவிக்கவில்லை என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal