தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா இப்போது சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இப்போது இளம் நடிகை ஒருவருடன் காதலில் விழுந்திருக்கிறார். 54 வயதாகியும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருந்த இவருக்கு இப்போது காதல் துளிர்விட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கிளப்பி இருக்கிறது.

இவர் நடிகராக நடித்து வந்த புதிதில் பல ஹீரோயின்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார். ஆனாலும் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்படிப்பட்ட இவரையே ஒரு நடிகை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை யாஷிகா தான்.

தற்போது 23 வயதாகும் இவர் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதவர். கவர்ச்சி கன்னியாக பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமானார். அதை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் கடந்த வருடம் பெரிய விபத்து ஒன்றில் சிக்கினார்.

அதிலிருந்து மீண்டு வந்துள்ள யாஷிகா இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் எஸ் ஜே சூர்யாவுடன் இவர் இப்போது மிகவும் நெருக்கமாக பழகி வருகிறாராம். இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியிடங்களுக்கு செல்வது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது நாள் வரை பலரும் எஸ்.ஜே சூர்யாவிடம் எப்போது திருமணம் என்று கேட்டு வந்த நிலையில் இவர் சரியாக பதில் கூறாமல் மழுப்பி கொண்டே வந்தார். ஆனால் இப்போது யாஷிகாவுடன் இவர் காட்டும் நெருக்கம் விரைவில் திருமணத்தில் தான் போய் முடியும் என்று திரையுலக பிரபலங்கள் பலரும் பேசி வருகின்றனர்.

எப்படியோ இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனால் சரிதான் என்று ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் வாயை திறக்கவே இல்லை.

கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என பலரும் நமுட்டு சிரிப்புடன் கூறி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal