‘ராஜா ராணி’ படத்தில் நடித்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா மாரி படத்தின் இயக்குநர் பாலாஜி மோகனை கடந்த வருடம் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் தெரிவித்துள்ளார்.

காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினின் தோழியாக நடித்திருந்தவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. அவர் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், “இயக்குநர் பாலாஜி மோகனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் தன்யா. இந்த ஆண்டு ஜனவரியில் திருமணமும் செய்துக் கொண்டார். திருமணமாகி ஒரு வருடமாகியும், இருவரும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை” என்றார் கல்பிகா. அதோடு தன்யா தனது படங்களின் ப்ரொமோஷன்களை தவிர்த்து வருவதாகவும் கூறினார். “ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள அவரது கணவர் தடுப்பதாக நான் கருதுகிறேன்” என்றும் தெரிவித்தார்.

தன்யா குறித்து கல்பிகா பேசியிருந்த வீடியோ யூ டியூப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த அவர், தன்யா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வீடியோவை நீக்கியதாகக் குற்றம் சாட்டினார்.

“யூடியூப் வீடியோக்கள் ஏதேனும் வழிகாட்டுதலை மீறினால், அவை யூடியூபருக்கு மின்னஞ்சல் மூலம் முறையாகத் தெரிவித்த பிறகு தான் அகற்றப்படும். இந்த விஷயத்தில், எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை” என்று கல்பிகா கூறினார்.

அதோடு தன்யா தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாகக் குறிப்பிட்ட அவர், “என்னை மிரட்டப் பார்க்கிறாயா? அல்லது என்னைக் கண்டு பயந்துவிட்டாயா? எப்படியிருந்தாலும், நான் சரியான பாதையில் செல்கிறேன்” என்று கூறியுள்ளார் கல்பிகா.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal