பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் காதலில் விழுந்துவிட்டதாக மீண்டும் கிசுகிசுக்கள் கிளம்பியிருக்கிறது!

பாலிவுட் ரசிகர்களை கவர்ச்சியால் கவர்ந்திழுப்பவர் நடிகை ஜான்வி கபூர். ஸ்ரீ தேவியின் மகளான இவர் மிகவும் சுலபமாக சினிமாவில் நுழைந்துவிட்டார். அதற்கு இன்னொரு காரணம், தந்தை பிரபல தயாரிப்பாளர். ‘தடக்’ திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான ஜான்வி கபூர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழியில் நடித்து சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடன் ஜோடியாக நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடனும் இவர் ஜோடி போட்டு நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை கனகச்சிதமாக செய்து அசத்துவதில் ஸ்ரீ தேவி தான் பெஸ்ட் என பெயர் எடுத்தவர் ஸ்ரீதேவி. அனைத்து ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே வலம் வந்தவர்!

தயாரிப்பாளர் போனிக்கபூரை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஸ்ரீ தேவி 2008ம் ஆண்டு உயிரிழந்தார். ஸ்ரீ தேவியின் மறைவுக்கு பிறகு படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர் அடிக்கடி காதல், பிரேக்கப், டேட்டிங் என தொடர்ந்து கிசுகிசுவில் சிக்கி வருவார்.

சமீபத்தில் ஜான்வி கபூர் மாலத்தீவுக்கு சென்ற போது, நடிகர் ஷிகர் பஹாரியாவுடன் இவர் இருந்ததால் இருவரும் டேட்டில் இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இது குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடந்த பேஷன் ஷோவில் ஷிகருடன் ஜான்வி ஜோடியாக காணப்பட்டார்.

ஊடகங்களின் கேமிராவில் இந்த ஜோடி சிக்கியதை அடுத்து இவர்களின் காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து, மீண்டும் ஜான்வி கபூர் தலைப்பு செய்தியில் இடம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஜான்வி கபூர் ஒரு பழுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் அசத்தலாகத் தோன்றினார், அதில் அவர் மேட்சிங் ஓவர் கோட்டுடன் இணைந்தார். ஷிகர் பிளிங்கி ஜாக்கெட்டில் ஸ்டைலாகத் தெரிந்தார்.

கொழுக் மொழுக் அழகை அவ்வப்போது கவர்ச்சியாக காட்டி வரும் ஜான்வி. அம்மா ஸ்ரீதேவி காட்ட தயங்கிய கவர்ச்சியை வாரி வாரி இறைத்தும் வாய்ப்புகளை தேடிவருகிறார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மில்லர், பால்வா, மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி ஆகிய படங்களை இவர் கைவசம் வைத்து இருக்கிறார்.

கண்ணழகால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஸ்ரீதேவி, அவரது மகள் கவர்ச்சி கட்டழகால் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal