டோல்கேட் என்றால் கட்டணம் ஒரு பக்கம் கவலையை கொடுத்தாலும் மற்றொரு பக்கம் வரிசையில் வெகு நேரம் காத்திருக்கும் சூழ்நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.

இன்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து துறையான ‘MORTH’ இந்தியாவில் புதிய வகையான TollGate முறையை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. இந்த புதிய முறையானது ANPR கேமரா மூலம் கார்களை அடையாளம் கண்டு டோல் பணம் எடுப்பது ஆகும்.

ஏற்கனவே RFID எனப்படும் ‘Fastag’ முறையில் டோல் பணம் வாகனங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்தியாவில் தினசரி TollGate பயணத்தில் 97% இந்த Fastag முறையிலேயே பணம் எடுக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

ஆனாலும் வரிசையில் நிற்பது குறையவில்லை, வாகனங்களின் காத்திருப்பு நேரம் பெரிய அளவு குறையவில்லை என்றும் இதனால் இதை மேலும் வேகப்படுத்த ANPR கேமரா பயன்படுத்தி இந்த நெரிசலை குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த புதிய முறையில் இந்தியாவில் உள்ள அனைத்து Toll Plaza நீக்கப்படும். Toll Plaza பதிலாக ANPR முறை அமல்படுத்தப்பட்டு கேமெராக்கள் நிறுவப்படும். இந்த ANPR (Automatic Number Plate Reader) வாகனங்களின் நம்பர் பிளேட் எண்களை படிக்கக்கூடிய திறன் கொண்டவை. இதன் மூலம் வாகனங்களின் நம்பர் பிளேட் எண்களை கொண்டு அந்த வாகனங்களின் டோல் கட்டணம் எடுக்கப்படும்.

இதுபோன்ற ANPR கேமெராக்கள் வரிசையாக நிறுவப்பட்டிருக்கும். அந்த வரிசையில் நாம் சென்று கடைசி ANPR கேமெராவை நாம் கடந்ததும் நமது டோல் பணம் எடுக்கப்பட்டிருக்கும். இந்த புதிய டெக்னாலஜி கொண்ட டோல் முறை கேட்பதற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தாலும் இந்த ANPR கேமரா 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்களை மட்டுமே அறியும். இதற்கு காரணம் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு முதல் அரசு வழங்கும் நம்பர் பிளேட் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டது. அதற்கு முன்னால் தனியார் சந்தைகளில் விற்கப்படும் நம்பர் பிளேட் அதிக அளவு பயன்படுத்தப்பட்டன.

மேலும் 9 எண்களை தாண்டி நம்பர் செல்லும்போது இந்த ANPR அவற்றை படிக்கச் சிரமப்படும். பலர் ஓட்டுனர்கள் நம்பர் பிளேட் உள்ளே அவர்களின் பெயர், ஊர் போன்ற பிற விவரங்களை எழுதியிருப்பார்கள். இதனால் ANPR அதை படிக்க சிரமப்படும்.

பெரிய கனரக வாகனங்களின் நம்பர் பிளேட் படிப்பதற்கே மிகவும் சிரமமாக இருக்கும். மேலும் இந்த வகை முறையால் டோல் ஏமாற்றி கடந்து செல்பவர்களை பிடிக்கவும் முடியாது. இதற்கெல்லாம் அரசு என்ன தீர்வு கொண்டு வரப்போகிறது என்பது பற்றி எதிர்காலத்தில் தெரியும்.

By Divya