சந்தானம் நடிக்கும் ஏஜென்ட் சந்தானம் படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறது. இந்த கதை சிறுவயதில் தாய் மீது கொண்ட கோபத்தால் சிட்டியில் தனித்து வாழும் சந்தானம் (கண்ணாயிரம்), தாயின் இறப்பு செய்தி வர கோயம்புத்தூரில் உள்ள சொந்த கிராமத்திற்கு புறப்படுகிறார். ஊருக்குச் செல்லக் கூட கையில் காசு இல்லாமல், லாரியில் லிப்ட்டு கேட்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தவரால், கடைசியில் தாயின் முகத்தைக் காண முடியவில்லை.

கடைசியாக ஒரு முறை கூட தாயைக் காணமுடியவில்லையே என்ற வருத்தத்துடன் இருக்கிறார் சந்தானம்.  இந்த நிலையில் ஊரில் நடக்கும் இறப்புகளின் பின்னணி, கொலையா என ஆராயும் முயற்சியில் ப்ரைவேட் டிடெக்டிவ்வாக செயல்படுகிறார். தொடர்ச்சியாக ரயில் தண்டவாளம் ஓரம் கிடக்கும் அனாதை பிணங்கள், போலீஸின் அலட்சிய போக்கு…போலீஸுக்கும் இவருக்கும் இடையே ஊடல் என கதை நகர…ஒரு கொலையில் சந்தானத்தை சந்தேகித்து கைது செய்கின்றது போலீஸ். 

லாக்கப்பில் ஒரு தந்தையின் சோகக் கதையைக் கேட்ட கண்ணாயிரம் ஏஜெண்ட் கண்ணாயிரமாக மாற கதை சூடு பிடிக்கிறது. கண்ணாயிரம், லாக்கப்பில் சந்தித்த அந்த நபர் யார்? அவரது கதை என்ன..அவருக்கு உதவும் முயற்சியில் ஏற்படும் திருப்பங்கள்… இறுதியில் சந்தானம் டிடெக்டிவாக தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா?  என்பதே ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் கரு.

இன்று நவ 25 வெளியான இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதா என்றால், இல்லை என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். சந்தானத்தின் பலமே அவரது கேலி பேச்சும் கிண்டலும் தான் அது இந்த படத்தில் சுத்தமாக இல்லை என்பதே மக்களின் கருத்து.

By Divya