‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கி ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘பத்து தல’. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, கலையரசன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடிக்கின்றனர்.
’பத்துதல’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிம்பு நடித்த பத்து தல படப்பிடிப்பு முடிவடைந்தது கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அதன் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
’பத்துதல’ திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.