ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள 'பெடியா' நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்டுடியோ கிரீன் பிரமாண்டமான முறையில் வெளியிட உள்ளது.
அப்படத்திலிருந்து 'எனக்காய் பிறந்தவளே நீயா' எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. பாடல் வரிகளும் உணர்வுப்பூர்வமான இசையும் கேட்பவர்களை பரவசமடைய வைக்கின்றன. இந்த பாடலை கார்த்திக் பாடியுள்ளார்.
சச்சின்-ஜிகர் இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை அமிதாப் பட்டாச்சாரியா மற்றும் எஸ். சுனந்தன் எழுதியுள்ளனர். பாடலின் ஒலி வடிவம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் திங்கட்கிழமை அன்று முழு பாடலும் வெளியாகிறது.