சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் எதிர்காலத்திற்காக புதிய சிட்டி ஒன்றை உருவாக்க போவதாக அறிவித்துள்ளார். “தி லையின்” என்று கூறப்படும் இந்த திட்டத்தினை 2030 ஆம் ஆண்டு முடிந்துவிடும் என்று கூறியுள்ளார். 
“தி லையின்” என்று கூறப்படுவதுற்கான காரணம் இந்நகரமானது 170 km அளவிற்கு நீளமாகவும் 1600 ஆடி உயரமாகவும் இருக்கும் என்பதே இதன் கட்டமைப்பாக இருப்பதால் தி லைன் என்று கூறப்படுகிறது.
மேலும் 9 மில்லியன் மக்கள் வாழ்வதுற்கான அணைத்து வசதிகளும் இருக்கும்படி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அனால் 2030 இல் 1.2 மில்லியன் மக்கள் தொகை இருக்கும் என்றும் 2045 இல் தான் 9 மில்லியன் மக்கள் தொகையை எட்டும் என்றும் இளவரசர் தெரிவித்துள்ளார்.
 
அதுமட்டுமின்றி கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்ப்பதுபோல் இக்கட்டிடமும் வலது புறமும் இடது புறமும் சீராக எவ்வித மாற்றமும்மின்றி கட்டப்படுவதோடு வாகனங்கள் ஓடுவதுற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போதைய காலகட்டத்தில் வாழும் மக்கள் மேற்கொள்ளும் மாசுபாட்டின்மையை இந்நகரம் மேற்கொள்ள கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.
 
2030  ஆம் ஆண்டு இந்த திட்டம் முடிந்துவிடும் என்று இளவரசர் கூறியிருந்தாலும் இதனை முடிக்க சுமார் 50 வருடம் எடுக்கும் என்று சில பொறியாளர்கள் கூறியுள்ளனர்.
 

By Divya